எமது மொழிகள்

எமது மொழிகள் இணையத்தளம்

தமிழ் “யுனிகோட்” பற்றி அறிந்துகொள்ள இங்கு நுழையும் உங்கள் அனைவரையும் எமது மொழிகள் இணையத்தளமானது அன்புடன் வரவேற்கிறது!

தமிழ் இலங்கையின் அரசகரும மொழிகளில் ஒன்று. தமிழ் மொழியைப் பயன்படுத்தி கணினியைக் கையாளுவது பற்றிய தகவல்கள், வழிகாட்டல்கள், அவற்றுடன் தொடர்பான மென்பொருள்கள் என்பனவற்றை இவ்விணையத்தளம் உங்களுக்கு வழங்குகின்றது.

இன்றையத் தகவல் தொழிநுட்பத்தின் அடைவுகளை இலங்கையின் தமிழ்பேசும் மக்களும் பெற்றுக்கொள்வதற்கான திருப்புமுனையை இம்முயற்சியானது ஏற்படுத்தியுள்ளது.

கணினியின் தேசிய மயமாக்கல் திட்டத்திற்கு, உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட “யுனிகோட்” குறிமுறையை இப்போது இலங்கையும் பயன்படுத்துகின்றது. இந்த இணையத்தளம், பல்வேறு கணினித்தளங்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட எண்ணற்ற தகவல்களையும் வளங்களையும் வழங்குகின்றது. உள்நாட்டு கணனித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, இங்குள்ள வளங்களை நீங்கள் பயன்படுத்தலாம். இது பற்றிய உங்களது கருத்துகளையும் எமக்குத் தெரியப்படுத்தலாம்.

மேலும், இங்குள்ள வளங்களை விருத்தி செய்வதற்கு உங்களை இலங்கை ‘யுனிகோட்’ சமூகத்திலே இணையுமாறும் நாம் அன்புடன் அழைக்கிறோம்.

எமது மொழிகள் இணையத்தளமானது இலங்கையின் யுனிகோட் சமூகத்தின் அங்கத்தவர்களான உங்களை அன்புடன் வரவேற்கின்றது!

தமிழ் யுனிகோட் முறையின் வெற்றிகரமான அமுலாக்கத்தில் இலங்கை ‘யுனிகோட்’ சமூகம் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் எதிர்காலமும் இச்சமூகத்தின் பங்களிப்பிலேயே தங்கியுள்ளது.

கணினி மற்றும் இணையத்தளம் என்பனவற்றைப் பயன்படுத்தி உள்ளூர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இம்முயற்சியின் இறுதிக்குறிக்கோளாகும். இதற்காக உள்ளூர் கணினிப் பாவனையை ஊக்குவிக்க வேண்டியுள்ளது.

அதற்கிடையே நாம் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ளக் கூடிய பல விடயங்கள் உள்ளன.

இதன் பொருட்டு ஒன்றிணையுமாறு அன்பின் கரங்களை உங்களின் பக்கம் நீட்டுகிறோம்! ஆகவே, இம்முயற்சிகளில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள். இந்த இணையத்தளமானது இத்தகைய சிறப்பு மிக்க முயற்சிகளுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

Syndicate content

web page hit counter